குலதெய்வத்தை வணங்காமல் விட்டுவிட்டால் இவ்வாரண பிரச்சனைகள் மட்டுமே வீடுகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

0

எந்த காரியம் செய்வதற்கு முன்பும் குல தெய்வத்தை கும்பிடுவது அவசியமாகிறது. பயணம் செல்வதற்கு முன்பு கூட குல தெய்வத்தை வணங்கினால் நம்முடைய குல தெய்வமே நமக்கு வழித்துணையாக வரும். குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும், என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை வாய்க்கும்.

நம்முடைய வீட்டில் பூஜை அறையில் எத்தனை சாமிகளின் படங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும். உங்களுக்கு பிடித்த இஷ்டதெய்வத்தின் படம் இருக்கலாம். தேவையற்ற படத்தை மாட்டிவைக்காதீர்கள். சில வீடுகளில் கோரமாக இருக்கும் தெய்வங்களின் போட்டோவை வாங்கி வந்து மாட்டிவைக்கிறார்கள் அவ்வாறு செய்வதும் தவறு. அவர்களை சாந்தபடுத்துவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

எல்லா சாமி படங்களையும் நீங்கள் மாட்டி வைத்தீர்கள் என்றால் நீங்கள் தினமும் அனைவருக்கும் பூஜை செய்ய வேண்டும். உங்களுக்கு இருக்கும் வேலை காரணமாக நீங்கள் தினமும் பூஜை செய்ய முடியாமல் போகும். அதனால் உங்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் சிலை வழிபாட்டை வீட்டில் அனுமதிக்காதீர்கள்.

வீடுகளில் சிலை இருக்கக்கூடாது. நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது கும்பிட்டு வந்தால் நோய்கள் தீரும், கஷ்டங்கள் காணாமல் போகும். வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்றைய கால கட்டத்தில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும் போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் கிடைத்தால் நாம் எத்தனை பெரிய காரியத்தையும் ஈஸியாக சாதித்து விட முடியும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் நம்மால் முன்னேற்றம் அடைய முடியாது. ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். ஆன்மீக பயணம் செய்து நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபட்டாலும் குடம் குடமாக பாலபிஷேகம் செய்தாலும் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எனவே குல தெய்வ வழிபாட்டை மறக்கக் கூடாது.

ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்னைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாத குற்றம் காரணமாக இருக்கும். அதேபோல கிரகங்களின் நல்ல பலன்களும் முழுமையாக ஒருவருக்கு பலன் தர வேண்டுமென்றால் குலதெய்வ அனுக்கிரகம் மிக முக்கியமாகத் தேவை. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ, திருமணம் தடை பட்டாலோ, புத்திர பாக்கியம் இல்லாமல் போனாலோ, ஏதேனும் தீமைகள் ஏற்பட்டாலோ குல தெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது. குல தெய்வத்தை சாந்திப்படுத்த நாம் வணங்கினால் மட்டுமே குறைகள் நீங்கும்.

Leave a Reply