படிகாரத்தை இவ்வாறறெல்லாம் பயன்படுத்தும் பொழுது எதிர்மறை சக்திகள் அழிந்து, வீட்டில் மன அமைதியும் பணப்புழக்கமும் பெருகும்.

0

பொதுவாக படிகாரத்தைக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு பரிகாரங்களை செய்யலாம். குறிப்பாக இந்த படிகாரம் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை உருவாக்க உதவுகிறது. மேலும் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. வாஸ்து தோஷத்தை நீக்குகிறது. வெற்றிலையில் படிகாரம் மற்றும் குங்குமத்தை வைத்து, நூலால் கட்ட வேண்டும். இதை புதன்கிழமை காலை அரச மரத்தின் கீழ் புதைக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை 3 புதன்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கு, வீட்டின் ஒவ்வொரு அறையிலும் படிகாரத்தை வைக்க வேண்டும். இதனால் வாஸ்து குறைபாடுகள் நீங்குவதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இவ்வாறு செய்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை இந்த படிகாரம் அழித்துவிட்டு, நேர்ர்மறை சக்தியாக மாற்றுகிறது.

வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால், படிகாரத்தைக் கொண்டு எதிர்மறை ஆற்றலை அகற்றுஙக்ள். அதற்கு குளியலறையில் ஒரு பாத்திரத்தில் படிகாரத்தைப் போட்டு வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாத்திரத்தை யாருடைய கண்ணிலும் படாத வகையில் வைக்க வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல் வெளியேறும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டால், ஒரு துணியில் படிகாரத்தைக் கட்டி, படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் தொடங்க விட வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல் நீங்கி, திருமண வாழ்வில் அமைதி உண்டாகும்.

உங்களுக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கிறதா? இந்த பிரச்சனையைப் போக்க ஒரு கருப்பு அல்லது நீல நிற துணியில் படிகாரத்தை வைத்து கட்ட வேண்டும். இந்த மூட்டையை இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் கனவுகள் எதுவும் வராது.

வீட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு, ஒரு சிவப்பு துணியில் ஒரு துண்டு படிகாரத்தை வைத்து கட்டி, அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணம் அதிகம் சேரும். மேலும் இது வியாபாரத்தில் வெற்றிக்கு வழிவகுப்பதோடு, சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும்.

Leave a Reply