வஜிர அபேவர்தனவுக்கு அடித்த அதிஸ்டம்.

0

ரணில் விக்கிரமசிங்கவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது.இந்த ஆசனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், எனினும் அந்த தகவல்களை ருவான் விஜேவர்தன நிராகரித்திருந்தார்.இந்தநிலையிலேயே வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.h

Leave a Reply