ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் பதவி பிரமாணம்.

0

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சற்று நேரத்தில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த பதவி பிரமாணம் நடைபெறவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுர குமார 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply