புதிய ஜனாதிபதிக்காக மூவர் போட்டியிடும் நிலையில் தற்போது இரகசிய வாக்குப் பதிவு ஆரம்பமானதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது.
ஜனாதிபதி பதவிக்காக , பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.



