நீங்க இந்த ராசிக்காரர்களா..? நல்லவங்க தான்..! ஆனால் ஆபத்து…!

0

ஒவ்வொரு இராசிக்கும் ஒவ்வொரு குணாதியங்கள் இருக்கும். அதே போல் அனைத்து மனிதர்களுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் இருக்கும்.

நாம் எந்த குணத்தை அதிகமாக வெளிக்காட்டுகிறோமோ அதுவே நாம் நல்லவரா, கெட்டவரா என்பதை தீர்மானிக்கிறது. ஒருவரது இராசிப்படி அவரது நல்ல குணங்கள் மற்றும் தீய குணங்களை அறியலாம்.

அதன்படி சிம்ம ராசி தைரியத்தையும் கம்பீரத்தையும் குறிக்கிறது. மேலும் சிம்மராசிக்காரர்கள் அன்பானவர்களாகவும் காதலில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்களது எதிர்மறை குணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

01- சிம்ம ராசிக்காரர்கள் தங்களை வலுவான மனநிலை உடையவர்கள் என நினைத்துக்கொள்வார்கள். தங்களது கருத்துக்களையும், முடிவுகளையும் மாற்றிக்கொள்ளமாட்டார்கள். மேலும் அவர்கள் எப்போதும் தான் சரியாக இருப்பதாக நம்புவார்கள். மற்றவர்கள் தன் சொல்படி நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

02 – சிம்ம ராசிக்காரர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக்கொள்வார்கள். அவர்களுக்கு தலைமை குணம் இயற்கையாகவே இருக்கும். தலைமை பொருப்பில் இருப்பவர்கள், மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள். எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மேலும் அனைத்திலும் சிறந்ததையே தான் அடைய வேண்டும் என நினைப்பார்கள்.

03 – சிம்ம ராசிக்காரர்கள் பிறரால் அதிகமாக காயப்படுத்தப்படுவார்கள். அவர்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் அதிகமாக ஏங்குவார்கள். ஆனால் இதை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் உயர்ந்ததையே எதிர்பார்ப்பார்கள்.

04 – சிம்மராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை விரைவாக அடைவதில் சிறந்தவர்கள். இருப்பினும் அவர்கள் சில தவறுகளையும் செய்வார்கள். அவர்களுக்கு ஆர்வம் மற்றும் பதட்டம் இருக்கும். மெதுவாக ஒரு காரியத்தை செய்து வெற்றியடைவார்கள்.

05 – இவை சிம்ம ராசிக்காரர்களது எதிர்மறை குணாதியங்கள் ஆகும். பொதுவாக சிம்மராசிக்காரர்கள் நம்பகமானவர்கள் மற்றும் அன்பானவர்கள். தனது விசுவாசிகளுக்கு உண்மையாக இருப்பார்கள்.

06 – இவர்கள் யாரையும் முழுமையாக நம்பி விடுவார்கள். இதனால் சில வேலைகளில் ஆபத்து ஏற்படலாம். அவதானமாக இருங்கள். – Source: manithan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply