முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார். இன்றோ, நாளையோ வீடு திரும்புகிறார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போடுவார். குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனால் தமிழக-கேரள எல்லையில் 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடக்கிறது. விமான நிலையங்களிலும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உணவு சாப்பிடக்கூடிய இடங்களில் அதிகம் பரவுகிறது. அதனால் ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் உணவு அருந்த வலியுறுத்தப்படும்.
முக கவசம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவசியம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உடனிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



