புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவு செய்யும் விதம் தொடர்பில் வெளியான தகவல்.

0

புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட உள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 38 வது ஷரத்தின் (1) துணை ஷரத்திற்கு அமைய ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படும் நேரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 40வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது போல், வெற்றிடமாக உள்ள ஜனாதிபதியின் மீதமுள்ள பதவிக்காலத்திற்கு மாத்திரம் அந்த பதவியை வகிக்க தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

1981 இலக்கம் 2 ஜனாதிபதியை தெரிவு செய்யும் ( சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.

1981 இலக்கம் 2 ஜனாதிபதியை தெரிவு செய்யும் ( சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.இந்த நடவடிக்கைகள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என்பதுடன் வாக்கெடுப்பின் போது, சபாநாயகருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.ஜனாதிபதி தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றம் மூன்று நாட்கள் கூடும். ஜனாதிபதி பதவி வெற்றிடமாகிய நாளில் இருந்து கூடிய விரைவில் அதேபோல் அன்றைய தினத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு மேற்படாத வகையில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அப்போதுநாடாளுமன்றத்தின் கூட்டம் மற்றும் உரிய தினம் மற்றும் நேரத்தை நாடாளுமன்ற செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பார்.

அவ்வாறு நாடாளுமன்றம் கூடும் போது, ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.நாடாளுமன்ற கூட்டம் ஆரம்பமான தினத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு குறையாது மற்றும் 7 நாட்களுக்கு பின்னர் ஒரு தினத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் தினம் மற்றும் நேரத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தீர்மானிப்பார்.

Leave a Reply