67 வயதிலும் பிட்டாக இருக்க நடிகர் சரத்குமார் கடைபிடிக்கும் டயட்.

0

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர். நடிகர் என்பதை தாண்டி அவர் பிட்னஸிற்கு பெயர் போனவர், 67 வயதிலும் பிட்டாக இருக்கிறார்.

தனது இளம் வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர். இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருக்க என்ன செய்கிறேன் என்ற விஷத்தை அவரே தெரிவித்திருக்கிறார்.

காலை எழுந்தவுடனே 10 பாதாம் அதனுடன் ப்ளாக் காஃபி அல்லது காஃபி சாப்பிட்டுவிட்டு , உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுவிடுகிறார். உடற்பயிற்சி முடித்தவுடன் மீண்டும் 10 பாதாம் சாப்பிடுவார்.

சிறிது நேரம் கழித்து பெர்ரி பழங்களை பால் சேர்க்கப்பட்ட ஸ்மூத்தி அதனுடன் ஒரு இட்லி சாப்பிடுவார். காலை 11 மணியளவில் பீனட் பட்டர் சேர்த்து ஒரு சப்பாத்தியை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்கிறார்.

அதன் பிறகு மாலை 4 மணிக்கு 10 முந்திரியுடன் , 3 பாதம் சாப்பிட்டு விட்டு , இரவு உணவாக சியா விதைகளுடன் பாதாம் பால் சேர்த்து சாப்பிடுகிறாராம்.

இதுதான் அவரது தினசரி டயட்டாக உள்ளது.

Leave a Reply