தனியார் பேருந்து சேவைகள் முடக்கம்.

0

வடமாராட்சியில் தனியார் பேருந்து சேவைகள் முடங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலை ஊழியர்களே இன்று(14) காலை முதல் சேவை முடக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாக காத்திருந்த தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படாமையே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

தனியார் போக்குவரத்து சேவைக்கு அந்தந்த சாலைகளிலிருந்து டீசல் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பருத்தித்துறை சாலை முகாமையாளரால் டீசல் வழங்கப்படாமையாலேயே யாழ்பாணம் – பருத்தித்துறை , பருத்தித்துறை – கொடிகாமம் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளது.

பருத்தித்துறை சாலை முன்பாக தனியார் பேருந்துகளை நிறுத்தி பேருந்து உரிமையாளர்கள், நடத்துநர்கள், சாரதிகள் என அனைவரும் காத்துள்ளனர்.

முல்லைத்தீவு சாலையிலிருந்த வந்த பேருந்து ஒன்று சுமார் ஆறு கொள்கலன்களில் டீசலை ஏற்றி சென்றதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் முறைப்பாடொன்றை தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சேவை முடக்கத்தால் பொதுமக்கள் அரச பேருந்துகளில் அதிக நெரிசலில் பயணிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply