இலங்கையின் நெருக்கடி நிலை காரணமாக, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ப்ளை டுபாய் நிறுவனமானது, இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, இந்த மாதம் 10ஆம் திகதியிலிருந்து மீள அறிவித்தல் வரை டுபாய்- கொழும்புக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோளிட்டு, சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளில் விமான பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கான கட்டணங்கள் பயணிகளிடம் மீள கையளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



