தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அப்படத்தின் பர்ஸ்ட் போஸ்ட்டர்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே விஜய் – லோகேஷ் கூட்டணியில் தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே தற்போது பிரபல படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின் wikipedia பக்கத்தில் அவர் அடுத்து தளபதி 67 பணியாற்ற உள்ளதாகவும் அப்படத்தின் டைட்டில் ‘நான் வாழும் உலகம்’ என உள்ளது.
இந்த விஷயம் தற்போது ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.



