இணைய வழி ஊடாக சஜித் மேற்கொள்ளும் முயற்சி!

0

இலங்கையில் சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

மக்களின் கோரிக்கைக்கமைய கோட்டா – ரணில் அரசை விலக்கி மாற்று அரசை அமைக்க அனைத்து கட்சிகளின் ஆதரவையும் தலைவர்களிடம் சஜித் பிரேமதாஸ கோரி வருகின்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக மறுத்தாலும் 113 பேரின் ஆதரவுடன் இருப்பவரே பிரதமராக முடியும்.

இந்த அடிப்படையினை கருத்தில் கொண்டு சஜித் ஆதரவு தேடல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியானது இணைய வழியாகவும் நேரடியாகவும் இடம்பெறுகின்றது.

பல கட்சிகள் இந்த பேச்சுக்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்ற போதிலும் சில கட்சிகள் நிபந்தனைகளை மட்டுமே தெரிவித்துள்ளன.

Leave a Reply