13ஆம் திகதியை பதவி விலக கோட்டாபய தீமானித்தது ஏன்; கசிந்த தகவல்!

0

எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்ததன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக கட்சித் தலைவர்கள் மத்தியில் தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் திகதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி எடுத்ததாக கூறப்படுகின்றது.

அதேசமயம் 13ஆம் திகதி போயா தினத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது என்பதால் ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமாணம் செய்து அன்றைய தினமே புதிய அமைச்சரவையை நியமிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த திட்டம் குறித்து மஹிந்த ராஜபக்ச, பஷில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடப்பட்டதாக கட்சித் தலைவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாளையே நாடாளுமன்றத்தை கூட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகரை வற்புறுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், புதிய பிரதமரை நாளை நாடாளுமன்றத்தில் நியமிக்க வேண்டும் என சபாநாயகரிடம் கூற கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

Leave a Reply