சிவனிடம் இந்த 10 பாவங்களுக்கு மட்டும் எப்போதும் மன்னிப்பே இல்லையாம்..!!

0

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?

பாவம் – 1 : அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.

பாவம் – 2 : அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.

பாவம் – 3 : உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.

பாவம் – 4 : கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.

பாவம் – 5 : மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

பாவம் – 6 : ஒருவரின் செய்கையால் மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.

பாவம் – 7 : இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.

பாவம் – 8 : வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.

பாவம் – 9 : மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.

பாவம் – 10 : முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply