எப்படி இருக்கிறார் விக்ரம்? எப்போது டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை.

0

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்தி பரவியது. ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Chest discomfort காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், அதற்காக நிபுணர் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

“அவருக்கு மாராடைப்பு ஏற்படவில்லை, உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” எனவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

Leave a Reply