கடவுச்சீட்டு வரிசையில் காத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு!

0

அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக  கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நேரத்தில் வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஷ்சந்திர, இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்த நேரத்தில், அத்தியாவசிய தேவையின்றி வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அத்தியாவசி தேவை கருதி வருபவர்கள் தங்களுக்கான  வாய்ப்பை இழக்கிறார்கள். எனவே, மிகவும் அவசியமானால் தவிர, இந்த நேரத்தில் வரிசையில் நிற்க  வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது பிராந்திய அலுவலகங்களிலும் நாங்கள் சேவைகளை வழங்கி வருகின்றோம்.  குருநாகல் தவிர்ந்த ஏனைய அலுவலகங்களில் வழக்கமான சேவைகளுக்கு மேலதிகமாக 150 ஒரு நாள் சேவைக்கான முன்பதிவுகளை நாங்கள் வழங்குகின்றோம்.  

இன்று (07) காலை  கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் மொஹான் குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண் கண்டிப்பாக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. அவருடைய நிலையை உறுதிசெய்த பிறகு அவருக்கு உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply