உங்கள் வீடு எப்போதும் கோவில் போலவே வாசமாக இருக்கும். தெய்வீக நறுமணம் கமழும் பூஜை பொடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

0

நறுமணத்தை கொடுக்கக்கூடிய இந்த பூஜை பொடியை எப்படி தயார் செய்வது. நேரத்தை கடத்தாமல் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கிராம்பு – 2 ஸ்பூன், ஏலக்காய் – 2 ஸ்பூன், சோம்பு – 2 ஸ்பூன், சந்தன பொடி – 2 ஸ்பூன், மஞ்சள் பொடி – 3 ஸ்பூன், ஜவ்வாது – 1/2 ஸ்பூன், பச்சை கற்பூரம் – 1 ஸ்பூன், வெட்டிவேர் – 2 ஸ்பூன், வெட்டிவேரை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளுங்கள். (உங்களுக்கு பூஜை போடி இன்னும் கொஞ்சம் அதிகமாக தேவை என்றால் இந்த பொருட்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்து கூட அரைத்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.)

மிக்ஸி ஜாரில் நம் போட்டிருக்கும் பொருட்களை எல்லாம் முதலில் விட்டு விட்டு அரைத்து அதன் பின்பு கொஞ்சம் வேகமாக அரைத்தால் ஓரளவுக்கு எல்லா பொடியும் நைசாக அறைந்து வந்துவிடும். ஆனால் ஏலக்காய், சோம்பு, வெட்டிவேர், இவை கொஞ்சம் திப்பி திப்பியாகத்தான் இருக்கும். ஒரு சல்லடையில் போட்டு இதை சலித்து பொடியை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை காற்று வெளியே செல்லாத ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் அப்படியே நறுமணத்தோடு இருக்கும். தேவையான போது தேவையான அளவு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பொடியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம். சிறிதளவு நாம் அரைத்த இந்த பூஜை பொடியை சிறிய கிண்ணத்தில் போட்டு பன்னீர் ஊற்றி குழைத்து பூஜை ஜாமான்களுக்கு பொட்டு வைக்க பயன்படுத்தலாம். நிலை வாசலில் பொட்டு வைக்க இந்த பொடியை பயன்படுத்தலாம். சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கவும் இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீடு துடைக்கும் போது அந்த தண்ணீரில் இந்த பொடியை கொஞ்சமாக போட்டு கலந்தும் வீடு துடைக்கலாம். வீடு முழுவதும் தெய்வீக வாசனை எப்போதும் நிறைந்திருக்கும். செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமையில் நிலைவாசல் தெளிக்கும்போது அந்த தண்ணீரில் கொஞ்சமாக இந்த பொடியை கலந்து நிலை வாசலில் தெளித்தால் வீட்டிற்கு அவ்வளவு லட்சுமி அம்சம் கிடைக்கும்்

.அத்தனை தெய்வங்களும் தேவதைகளின் அம்சமும் உங்களுடைய வீட்டில் சேர்ந்து நிற்கும். வீட்டில் இல்லாத தெய்வ சக்தி கூட நிலையாக வந்து நிரந்தரமாக குடிகொள்ளும். உங்கள் வீடே கோவிலாக மாறும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது. கண் திருஷ்டியால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியாலும் வீட்டிற்குள் நுழைய முடியாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்ற வாசனைகள் தான் இவை. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டுக்கு யாராவது வந்தா கூட, உங்க வீடு எப்படி இவ்வளவு வாசனையா இருக்குன்னு நிச்சயம் கேப்பாங்க.

Leave a Reply