பச்சைக் கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் படுவேகத்தில் பணக்காரர் ஆகிவிடலாம்.

0

பணம் சம்பாதிக்க தேவையான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். அதில் வரும் தடைகளை தகர்த்து பரிகாரம் கைகொடுக்கும்.

செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆனால் செவ்வாய்க்கிழமை முந்தைய தினம் திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமை முந்தைய தினம் வியாழக்கிழமையும் இந்த தண்ணீரை நீங்கள் தயார் செய்து வைக்க வேண்டும். திங்கட்கிழமை இரவு 1 டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இந்த தண்ணீரை மறுநாள் காலை அதாவது செவ்வாய்க்கிழமை காலை எழுந்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரோடு ஊற்றி கலந்து வாசல் தெளிக்க வேண்டும்.

நல்ல மனம் நிறைந்த இந்த தண்ணீரை வாசலில் தெளித்து கோலம் போடும் போது உங்கள் வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

இந்த வாசத்தை வீட்டில் இருப்பவர்கள் சுவாசிக்கும் போது, அதாவது வெளியே செல்லும் போது நீங்கள் நிலை வாசலில் தெளித்து இருக்கும் தண்ணீரின் வாசம் உங்களுடைய மூக்கில் நிச்சயம் செல்லும். அந்த வாசம் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெளியே சென்று செய்யக்கூடிய வேலையை இன்னும் சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குவீர்கள்.

வேலையை சுறுசுறுப்பாக செய்யும்போது வருமானமும் அதிகரிக்கும் தானே.

இந்த தண்ணீரை கொஞ்சமாக எடுத்து அதாவது மஞ்சள் தூள் பச்சைகற்பூரம் சீரகம் சேர்த்த தண்ணீரை, சாதாரண தண்ணீரோடு கலக்காமல் அப்படியே எடுத்து தீர்த்தம் போல வீட்டிற்குள் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும் அந்த வாசம் வீடு முழுக்க நிரம்பி இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு மன நிம்மதியை கொடுக்கும்

Leave a Reply