வீட்டில் இந்த மரங்களை இந்த திசையில் வளர்த்து வந்தால் யாரும் பசியுடன் தூங்க மாட்டார்கள்..!

0

நம்முடைய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் பத்து மரங்கள் வளர்க்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

அதில் எந்தெந்த மரங்களை வீட்டில் எந்தெந்த இடங்களில் வளர்க்க வேண்டும்?

வீட்டுக்கு முன்பாக ஒரு வேப்ப மரம் இருக்க வேண்டும்.

அதற்குப் பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும்.

ஒரு பப்பாளி மரமும் இருக்க வேண்டும்.

தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் நட வேண்டும்.

பாத்திரங்கள் கழுவும் இடத்துக்கு அருகில் தென்னை மரம் இருக்க வேண்டும்.

ஒரு எலுமிச்சை மரமும் இருக்க வேண்டும்.

எலுமிச்சை மர நிழலிலேயே ஒரு கறிவேப்பிலை செடி நட்டு வைக்க வேண்டும்.

வீட்டுக்கு ஒரு நெல்லிக்காய்ச் செடி கட்டாயம் இருக்க வேண்டும்.

வேலியின் நான்கு இடத்தில் சீதாப்பழம் மரம் இருக்க வேண்டும்.

வீட்டில் நிறைய இடம் இருந்தால் பலாக்கன்றும் நடலாம்.

ஒரு மா மரம் வைக்க வேண்டும்.

இப்படி இந்த பத்து வகை மரத்தையும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்து வந்தால், உலகில் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிடுவார்.- Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply