உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து இயந்திர சாரதிகள் உட்பட தொடருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதன்காரணமாக தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கோட்டை, மருதானை உள்ளிட்ட நிலையங்களில் இருந்து புறப்படவிருந்த பல தொடருந்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல வந்த மக்களுடன் பெருமளவான பயணிகளும் கோட்டை தொடருந்து நிலையத்தில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



