அதிகம் அதிகரிக்கும் இராணுவத்தினரின் தலையீடு! : தடைப்பட்ட எரிபொருள் விநியோகம்!

0

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையை அடுத்தே சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த தகவலை அறிந்த பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும், ஏனையோருக்கு வழங்க முடியாது என இராணுவத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து, இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தியுள்ளனர்.

Leave a Reply