கிருஷ்ணரை இந்த நாளில் வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்குமாம்..!

0

கண்ணன் இரவு 12 மணிக்கு பிறந்தார், அதனால் வெளிமாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு பன்னிரண்டு மணி வரை உபவாசம் இருந்து கண்ணனின் துதிப்பாடல்களைக் பாடிச் சிறப்பிப்பர். இந்தத் தினத்தில் பெண்கள் விரதமிருப்பது நல்லது, முக்கியமாக திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், ஆண்குழந்தை இல்லாதவர்களும் இந்நாளில் விரதமிருந்து கண்ணனைத் துதிப்பதால், ஆண்குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply