தேர்தல்களுக்கு தயாராகுமாறும் ஜனாதிபதி கோரிக்கை.

0

எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதுடன், அடுத்ததடுத்து இரண்டு தேர்தல்களுக்கு தயாராகுமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Leave a Reply