திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்.

0

திருப்பூர் மாவட்டத்தில் 8 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் திகதி இடம்பெறும்.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தற்செயல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் 16-வது வார்டு உறுப்பினர், பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினர், ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர், அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம், குடிமங்கலம் 1-வது வார்டு உறுப்பினர், காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர், பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், உடுமலை ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Leave a Reply