இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

0

இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

டெங்கு அபாயம் உள்ள பிரதேசங்களாக 74 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவற்றுள் சீதுவ, குண்டசாலை, வத்தேகம, குளியாப்பிட்டிய, வாரியபொல, பதுளை, பசறை, வெலிமடை, பெல்மடுல்ல மற்றும் கலிகமுவ ஆகியவை அடங்குவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சுற்றாடலை சுத்தமாக பேணுவதன் மூலம் டெங்கை கட்டுப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply