தமிழகத்தில் படுக்கையுடன் திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் புகுந்த காங்கிரசார்.

0

நேசனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைகண்டித்து தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

எனவே இதனை கண்டித்து இன்று திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் சித்திக், மகளிர் காங்கிரஸ் தலைவர் ரோஜாபேகம், மண்டலதலைவர் நாகலட்சுமி, நிர்வாகிகள் காஜாமைதீன், ராமுராமசாமி, வரதராஜன், வேங்கைராஜன் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ஒன்று திரண்டனர்.

வத்தலக்குண்டுவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மேலும் பாய் மற்றும் படுக்கையுடன் வந்த அவர்கள் திடீரென போலீசார் தடுப்பை மீறி தபால் அலுவலகத்திற்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் பாய் விரித்து படுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக தபால் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் இதுதொடர்பாக 48-க்கும் மேற்பட்டோைர கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி போலீசாரை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply