தமிழகத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இடிப்பு.

0

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த அல்லித்துறை அருகே உள்ள சாந்தபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாகணபதி, ராஜகாளியம்மன் கோவில் புங்கனூர்-அல்லித்துறை மெயின் ரோட்டில் உள்ளது.

இந்தக் கோவில்களை தற்போது இடித்துவிட்டு புதிய கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இது குறித்து அப்பகுதியில் உள்ள 80 வயது தக்க பெரியவர் ஒருவர் கூறுகையில், இந்த கோவிலானது தனக்கு விவரம் தெரிந்த காலத்தில் 5 படிகள் வைத்து மிக உயரமாக இருந்தது.

அதற்கு முன்பு எத்தனை படிகளுடன் எவ்வளவு உயரமாக இருந்தது என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் தற்போது இந்த கோவில் புங்கனூர்-அல்லித்துறை மெயின் ரோட்டின் ஓரத்தில் இருப்பதால் ஒவ்வொரு முறையும் புதிதாக ரோடு போடும் போது ரோட்டின் மட்டம் உயர்ந்ததால் தற்போது கோவிலில் 5 படிக்கட்டுகளும் பூமிக்கு அடியில் சென்று விட்டன.

மேலும் உள்ளே இருந்த விநாயகர் சிலை இருக்கும் கற்பகிரகம் சுரங்கம் போல் காட்சியளிக்கிறது.

எனவே சாந்தாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக புதிய கோவில் கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது.

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. எங்கள் பாட்டன்,
முப்பாட்டன் கட்டிய கோவிலை இடித்தது வருத்தமாக இருக்கிறது. விரைவில் புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யப்படும் என்று கூறினார்.

Leave a Reply