எந்தெந்த ராசியாளர்கள் எந்த பொருளால் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் யோகம் குவியும் தெரியுமா…?

0

விநாயகருக்கும் ராசி கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மனிதர்கள் கிரகங்களின் இடப்பெயர்ச்சிகளால் அடையும் பலாபலன்கள் அவரவர் ராசிகளையும் சென்றடைகிறது. இந்த ராசிகளுக்கான முழுமுதல் அதிபதியாக திகழ்பவர் விநாயகர். கணபதி என்று அழைக்கப்படும் அவர் மீது 12 ராசிகளும் வீற்றிருக்கும் நிலையே யோக கணபதி நிலையாகும்.

எனவே பன்னிரண்டு ராசிக்காரர்களும் விநாயகர் சதுர்த்தி திதி நேரத்தில் விநாயகருக்கு ராசிக்கேற்ப உகந்த தீர்த்த பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் சுபிக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேஷ ராசிக்காரர்கள்
விநாயகருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

ரிஷப ராசிக்காரர்கள்
விநாயகருக்கு சாணப்பொடியால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

மிதுன ராசிக்காரர்கள்
விநாயகருக்கு எலுமிச்சை சாற்றினால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

கடக ராசிக்காரர்கள்
விநாயகருக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்கள்
விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

கன்னி ராசிக்காரர்கள்
விநாயகருக்கு சாத்துக்குடி அல்லது நார்த்தம்பழத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள்
விநாயகருக்கு தேனால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

விருச்சிக ராசிக்காரர்கள்
விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

தனுசு ராசிக்காரர்கள்
விநாயகருக்கு மஞ்சள் பொடி அல்லது தேனால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

மகர ராசிக்காரர்கள்
விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

கும்ப ராசிக்காரர்கள்
விநாயகருக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

மீன ராசிக்காரர்கள்
விநாயகருக்கு மஞ்சள் பொடி மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். -Source: dailyhunt


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply