இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை.

0

இலங்கையில் கடைகளில் மக்கள் பசியைத் தணிக்க உண்ணும் அத்தியவசியமான பொருட்களான காய்கறிகள், மீன்கள் மற்றும் உலர் மீன்களின் விலைகள் நம்பமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன.

இந்நிலையில் சுப்பர் மார்க்கெட்களிலும் சாதாரண கடைகளிலும் உள்ள பொருட்களின் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் சில மாதங்களுக்கு முன் 100 ரூபாய்க்கு குறையாமல் இருந்த சில மரக்கறிகளின் விலை தற்போது 1000 ரூபாயை நெருங்கியுள்ளது.

சந்தையில் நேற்றைய தினம் பதிவாகிய மரக்கறிகளின் விலைகளின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

கறி மிளகாய் ஒரு கிலோ கிராம் 890 ரூபாய், தக்காளி 890 ரூபாய், கரட் 500 ரூபாய், பீட்ரூட் 600 ரூபாய், தேசிக்காய் 950 ரூபாய், லீக்ஸ் 320 ரூபாய், பாகற்காய் 1380 ரூபாய், புடலங்காய் 480 ரூபாய், பச்சை மிளகாய் 900 ரூபாய், பெரிய வெங்காயம் 290 ரூபாய், சிறிய வெங்காயம் 960 ரூபாய், பூண்டு 840 ரூபாய், உருளைக்கிழங்கு 390 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

சுப்பர் மார்க்கெட்களில் பல காய்கறி அலுமாரிகளும் வெறுமையாகவே காணப்பட்டது. சுப்பர் மார்க்கெட்களில் சுமார் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பத்து முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி தற்போது 515 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சாதாரண கடைகளில் உலர் மீன்களின் விலைகளிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய நெத்தலி ஒரு கிலோ கிராம் 3000 ரூபாய், பலயா 2400 ரூபாய், கட்டா 3400 ரூபாய், தலபத் 3600 ரூபாய், கீரமின் 3000 ரூபாய், காய்ந்த இறால் 2000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply