கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

0

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதியினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசம் செயல் புரிந்த பெண்கள், இவ்விருதினை பெற தகுதியுடையவராவர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவுகள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ தொடர்பான சம்பவங்கள், துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின்போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகச சம்பவங்கள் தொடர்பாக இவ்விருது வழங்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்பான சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ 30.6.2022-க்கு முன்பாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Reply