செல்வராகவன் கொடுத்த நானே வருவேன் படத்தின் அப்டேட்..!!!

0

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

செல்வராகவன் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.

இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் விக்ரம் வேதா பட இயக்குனரின் புதிய அறிவிப்பு இந்நிலையில், நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply