ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் தீவிரம்.

0

தமிழ்நாட்டில் ரேசன் கடை ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்க கோரி வருகிற திங்கட்கிழமை முதல் (13-ந்தேதி) சென்னையிலும் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் திகதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் ரேசன்கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து ரேசன் கடை ஊழியர்கள் நேற்று முதல் கடைகளை திறக்காமல் ‘ஸ்டிரைக்’ செய்து வருகின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ரேசன் கடை ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் அமுதம், சிந்தாமணி, காமதேனு மற்றும் சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிர்த்து 25 ஆயிரம் ரேசன் கடைகளில் உள்ள ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply