ஏழ்மை, நோய், மனக்கவலை எல்லாம் அகல பலன் தரும் ஸ்லோகம்

0


கங்கா ஸிந்துஸரஸ்வதீ ச யமுனா கோதாவரீ நர்மதா
க்ருஷ்ணா பீமரதீ ச பல்குஸரயூ: ஸ்ரீகண்டகீ கோமதி
காவேரி கபிலாப்ரயாகவிநதா வேத்ராவதீத்யாதயோ
நத்ய: ஸ்ரீஹரிபாதபங்கஜபவா: குர்வந்து வோ மங்களம்
வாதிராஜர் அருளிய ஸர்வமங்களாஷ்டகம்.

பொதுப் பொருள்: மகாவிஷ்ணுவின் பாத கமலங்களிலிருந்து பிறந்த கங்கை நதி மட்டுமல்லாது, சிந்து, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, நர்மதா, கருணா, சரயூ, கண்டகீ, கோமதி, காவேரி, ப்ரயாகை ஆகிய எல்லா நதிகளையும் நமஸ்கரிக்கிறேன். தம் தெய்வீகத்தால் பூமிக்கு செழிப்பை உண்டாக்கும் நதிகளே, எனக்கும் மங்களத்தை அருளுங்கள். என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் நலம் பெற திருவருள் புரியுங்கள். நமஸ்காரம்.

(துலாஸ்நானம் ஆரம்பிக்கும் நாளில் இந்தத் துதியை உச்சரித்து மானசீகமாக அனைத்துப் புண்ணிய நதிகளையும் வணங்கினால், அவை எல்லாவற்றிலும் நீராடிய பலன் கிடைக்கும்; ஏழ்மை, நோய், மனக்கவலை எல்லாம் அகலும்.) – Source: Dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply