இன்று உணவு பாதுகாப்பு தினம்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

0

ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் திகதி உலக உணவுப் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு இல்லை என்றால், கொடிய நோய்களும், தொற்று நோய்களும் நம்மை எளிதாகத் தாக்கக்கூடும்.

தொற்று நோயிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.

நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பதை மனதில் நிலை நிறுத்தி, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலைக் காத்து, உள்ளத்தை வலிமை பெறச்செய்ய வேண்டும் என நாம் அனைவரும் உலக உணவுப் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply