எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் இன்னும் தீர்மானம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான சமூக ஊடக அறிக்கைகளையும் லிட்ரோ நிறுவனம் நிராகரித்துள்ளது.
அத்துடன் 2.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை வரை விநியோகிக்கப்பட மாட்டாது என நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கையில் போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.



