இந்த பழம் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?…

0

நாம் தினமும் உறங்கும் போது கனவு வருவது இயல்பு. அந்த கனவில் நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள், மனிதர்கள், இடங்கள் என பலவற்றைக் காண்கிறோம். அவை சாதாரணமாக நம்முடைய கனவில் வந்துபோகின்றன என்று நினைக்கிறோம்.

ஆனால் நம்முடைய கனவில் வரும் பொருள்களுக்கென தனித்தனியே குறியீடுகள் உண்டு. அந்த குறியீடுகள் நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற அல்லது நடக்கப்போகிற சிலவற்றைப் பிரதிபலிப்பதுண்டு.

அதுபோல் நம்முடைய கனவில் பழங்களைக் கண்டால் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் சில அர்த்தங்கள் உண்டு. என்ன பழம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போமா?

நன்கு கனிந்த மற்றும் ஈ மொய்க்கும் பழங்கள் கனவில் வந்தால் எரிச்சலூட்டும் சம்பவங்களை சந்திப்பீர்கள் அல்லது ஏதாவது சிறப்பான சந்தர்ப்பம் உங்களைத் தேடி வரும் என்று அர்த்தம்.

திராட்சைப்பழம் கனவில் வந்தால் உங்கள் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அர்த்தம். மேலும் திராட்சை கனவில் வருவது உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் குறியீடாகும்.

கிவி பழம் உங்கள் கனவில் வந்தால் சற்று மேனச்சுார்வுடன் இருக்கிறீர்கள். புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று பொருள். அது உங்களுக்கு மனவலிமையைத் தரும் குறியீடாகவும் அமையும்.

பலாப்பழம் வளமை, ஆண்மை ஆகியவற்றின் குறியீடாக அமைகிறது. பலாப்பழம் உங்களுடைய கனவில் வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப்போகிறது என்று அர்த்தம்.

ஸ்டார் ஃபுரூட் வருவது போல் கனவு கண்டால் நீங்கள் சரியான பாதையை நோக்கிப் போகிறீர்கள். வெற்றிக்கனியை சுவைக்கப் போகிறீர்கள் என்பது பொருள்.

சீதாப்பழம் கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையுமு் மனமும் அமைதியால் நிரம்பும். ஆன்மிக எண்ணங்கள் அதிகம் தோன்றும் என்று பொருள்.

இதுபோல் ஒவ்வொரு பழத்துக்கும் தனித்தனி குறியீடும் பொருளும் உண்டு. – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply