பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த
துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பாணந்துறை நிர்மல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



