இலங்கை மின்சார சபைக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு.

0

இலங்கை மின்சார சபைக்கு பொது பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் இலங்கை மின்சார சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினை எதிர்வரும் 7 ஆம் திகதி பொது நிர்வாகங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், மீன்பிடி அமைச்சு ஆகியவற்றினை அரசாங்க நிதி பற்றிய குழுவில் அடுத்த வாரம் முன்னிலையாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply