தேயிலைத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும் அபாயம்.

0

தென்னிலங்கை தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாகவே குறித்த தொழிற்சாலைகள் மூடப்படும் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் உற்பத்திக்கான செலவும் அதிகரித்துள்ளதுடன், அதனை ஈடுகட்டப் போதுமான அளவில் தேயிலை உற்பத்தியும் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேயிலைத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கு டீசல் தேவை என்ற போதிலும் அண்மைக்காலமாக நாட்டில் டீசலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

தேயிலைத்தூள் உற்பத்தியில் தடங்கல்
இதன் காரணமாக உயர்தரமான தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான ஒரு நிலை தொடர்ந்தும் நீடித்தால் தமக்கு தேயிலைத் தொழிற்சாலைகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply