மெனிங் சந்தை உள்ளிட்ட காய்கறிச் சந்தைகள் அனைத்தும் மூடும் வாய்ப்பு.

0

தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக விவசாயிகளின் உற்பத்திகள் மெனிங் சந்தை மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு எடுத்து வரப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் மெனிங் சந்தை உள்ளிட்ட காய்கறிச் சந்தைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக காய்கறி வர்த்தகர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன்பிரகாரம் தக்காளி ஒரு கிலோ 700 ரூபா வரை உயர்ந்துள்ளது. ஏனைய காய்கறிகளும் அவ்வாறே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெனிங் சந்தை வர்த்தகர்கள் தாங்களே வாடகை வாகனங்கள் மூலம் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை கொள்வனவு செய்யும் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

மேலும் போதுமான அளவில் காய்கறிகள் கிடைக்காத பட்சத்தில் பொருளாதார மத்திய நிலையங்கள் மட்டுமன்றி மெனிங் சந்தையும் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply