அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த சந்திப்பு இன்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 21 ஆம் திருத்தச் சட்டமூல வரைபு தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு 21ஆம் திருத்தச் சட்டமூல வரைவை முன்னிலைப்படுத்தி ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் வரைவில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை மற்றும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகுவதை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 26ஆம் திகதி கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



