ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள்.

0

கோவிலுக்கு செல்லும்போது கொடி மரத்துக்கு கீழே கற்பூரம் ஏற்றினால் காற்றில் அது உடனே அணைந்து போய்விடும்.

கட்டியாக இருக்கக்கூடிய கற்பூரத்தை நசுக்கிவிட்டு தூள் செய்து ஏற்றினால் அந்த கற்பூரம் அடிக்கும் காற்றில் கூட நின்று எரியும்.

பொதுவாகவே பூஜை என்றால் அதில் இந்த வெற்றிலை பாக்குக்கு முதலிடம் உண்டு.

சுபகாரியங்களுக்கு பூஜை செய்யும்போது 4 வெற்றிலை, 2 பாக்கு, என்ற கணக்கில் வைக்க வேண்டும்.

அதுவே தர்ப்பணம் தெவசம் போன்ற திதிகளுக்கு 1 வெற்றிலை, 1 பாக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜையறையில் விளக்கில் மீதம் இருக்கும் எண்ணெயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்துவிட்டு அதன் பின்புதான் அந்த விளக்குகளை சுத்தம் செய்வோம் அல்லவா‌.

மீதமான பழைய எண்ணெயை ஒரு அகல் விளக்கில் ஊற்றி நிலை வாசலில் ஏற்றலாம்.

அப்படி இல்லை என்றால் உருளையின் பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் சமையலறையில் ஏற்றலாம்.

நம்மில் நிறைய பேர் இப்போது கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றோம்.

அந்த கோமதி சக்கரமானது பூஜை அறையில் 11 என்ற கணக்கில் இருக்கும் போதுதான் அதனுடைய முழு பலனை நம்மால் பெற முடியும். உங்களுடைய வீட்டில் ஏற்றி வைக்கக்கூடிய ஊதுபத்தி நீண்ட நேரம் கமகமன்னு வாசத்தோடு நின்று எரிய வேண்டுமா.

ஊதுவத்தியில் நெருப்பு வைக்கும் முனையை தவிர, மற்ற இடங்களில் லேசாக தண்ணீரில் நனைத்துவிட்டு அதன் பின்பு ஊதுபத்தியை ஏற்றி வைத்தால் அது நீண்ட நேரத்திற்கு நின்று எரியும்.

நீங்கள் ஏற்றி வைக்கக்கூடிய தீபம் சுடர் விட்டு அழகாக ஒளிர வேண்டுமா.

விளக்கு ஏற்றக் கூடிய எண்ணெயில் இரண்டு கல், கல் உப்பை போட்டு ஏற்றி பாருங்கள்.

நீங்கள் ஏற்றக்கூடிய தீபம் பிரகாசமாக மின்னும். சுவாமி படங்களை துடைக்கும்போது துணியில் தண்ணீரைத் தொட்டு தானே துடைப்போம்.

அந்த தண்ணீரில் கொஞ்சமாக கற்பூரத்தை நசுக்கிப் போட்டு கரைத்து விடுங்கள். இந்த கற்பூரம் கலந்த தண்ணீரை தொட்டு சுவாமி படங்களை துடைத்தால் சாமி படம் அவ்வளவு சீக்கிரத்தில் பூச்சி அரிக்காது.

மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் நிச்சயமாக தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் ஆகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

Leave a Reply