வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க தீர்மானம்.

0

வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பரீட்சைகள், பெறுபேறுகள் வெளியீடு, பாடப் புத்தகங்கள் விநியோகம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கல் என்பன உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் செயலாளராக நிஹால் ரணசிங்க பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு இடைநிறுத்தப்படுவதுடன் பிரிவேனா பிரிவின் பணிகளை மீளமைப்பதும் மிகவும் முறையாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply