காலில் மச்சம் உள்ள உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் பற்றி தெரியுமா?

0

குழந்தை பிறந்த உடனே அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சத்தைப் பொறுத்து இவன் அதிர்ஷ்டசாலி, இவள் பொறுமையானவள் என்று அவர்களின் குண நலன்களையும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அவ்வாறு கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு என்னவித குணநலன்களும், எந்தவித அதிர்ஷ்டமும் கிடைக்கிறது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

குதிக்காலில் மேற்புரம் அல்லது அடிப் பகுதியில் மச்சம் இருந்தால் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

பணத்தை எப்பொழுதும் இரட்டிப்பாக்குவது எப்படி என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

அதிலும் இவர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களாக இருப்பார்கள்.

இதன் மூலம் இவர்களுக்கு செல்வாக்கு மிகுந்த வாழ்க்கை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இவர்கள் எப்பொழுதும் செல்வ வசதியுடன் வாகன வசதியுடன் தான் இருப்பார்கள்.

கட்டை விரலின் கீழ்ப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் எப்பொழுதும் மற்றவர்கள் மீது அன்பாக இருப்பார்கள்.

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் தானாக இவர்களைத் தேடி உதவிகள் வரும்.

வலது பாதத்தில் மச்சம் உள்ளவர்கள் எப்பொழுதும் அமைதியானவர்களாகவும், மற்றவர்கள் மீது அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.

எல்லோரையும் எளிதில் நம்ப கூடியவர்களாகவும், தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்பவர்களாகவும், சிறந்த குணத்தை கொண்டிருப்பார்கள்.

எப்பொழுதும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள்.

எந்த ஒரு வேலையையும் முயற்சி செய்து வெற்றி காண்பார்கள்.

வலது பாதத்தின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பொறுமை சாலியாகவும், மிகுந்த இறையாண்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

  • எந்த ஒரு காரியத்தையும் எளிதில் விட்டு விடாமல் கடைசி வரை முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.

இடது பாதத்தில் மச்சம் உடையவர்கள் எப்பொழுதும் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.

எதனையும் இவர்களால் எளிமையாக பெற முடியாது. இடது பாதத்தின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகுந்த துயரத்தில் உள்ளவர்களாகவும், போராட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

இடது பாதத்தில் வலதுபுறம் மச்சம் இருந்தால் இவர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும். ஒரு சிலர் மது பிரியர்களாக இருப்பார்கள்.

வலது தொடையில் மச்சம் உள்ளவர்கள் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாகப் பார்ப்பார்கள்.

இவர்கள் மற்றவர்கள் மனதை எளிதாக புரிந்து கொண்டு நடப்பார்கள். இவர்களை எவராலும் எளிதாக ஏமாற்ற முடியாது.

கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

Leave a Reply