கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து சேவைகள்.

0

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணி குழாமினரின் நலன்கருதி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் விசேட பேருந்து சேவைகளும் என்ற முதல் சேவையில் ஈடுபடும்.

இந்நிலையில் இன்று முதல் நாளாந்தம் 8000 பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சகல தொடருந்து வரையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply