கொழும்பில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது மோதுவதாக கூறி சாரதிகளிடம் கப்பம் பெறும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகமொன்று இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது டவுன்ஹோல் மற்றும் அதனை சுற்றி வரும் பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் யாசகம் பெறும் பெண் வாகனத்தில் மோதுண்டு கீழே விழுந்துள்ளார்.
மேலும் அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுள்ளதா என பார்ப்பதற்கு வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று பார்க்கும் போது அவருக்கு மிக சிறிய அளவிலான பாதிப்புகளே காணப்பட்டுள்ளது.



