இலங்கையில் சிறைச்சாலைகளில் நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் சிறைச்சாலைகளுக்குள் நடத்தப்படும் சமய, தொழில் கல்வி பயிற்சிகள் உட்பட சிறைச்சாலை புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து நல்லொழுக்கத்துடன் செயற்பட்ட 101 கைதிகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மேலும் குறித்த கைதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 7 , 10 மற்றும் 14 நாட்கள் என இரண்டு முறை விடுமுறை வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர்(நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.



