சாமி கும்பிடும் பொழுது கண்ணீர் வருகிறதா?

0

வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இருக்கும் பொழுது பூஜை செய்து விட்டு பார்த்தால் நம்முடைய மனம் கலங்கி கண்ணீர் ஆனது வெளியில் வரும்.

இது எப்பொழுதும் நடக்கா விட்டாலும், எப்பொழுதாவது நிச்சயம் நடந்திருக்கும்.

அதே போல வீட்டில் மட்டும் அல்லாமல் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்கும் பொழுது நம்மை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

இப்படி கோவிலில் நின்று கொண்டு அழுவது என்பது நல்ல செயல் தானா? என்று கேட்டால் நிச்சயம் நன்மை தான்.

வெள்ளிக்கிழமையில் அழுகை சத்தம் வீட்டில் கேட்டால் துரதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள்.

ஆனால் அது துக்கத்திற்காக வரும் அழுகை, வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வரக்கூடிய அழுகையே அன்றி நாம் இறைவனை நினைத்து மனமுருகி தியானிக்கும் பொழுது அழுவது என்பது ரொம்பவே நல்ல விஷயம் தான்.

வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யும் பொழுது வீட்டில் பெண்கள் கண்டிப்பாக ஆழ கூடாது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இறைவனை நினைக்கும் பொழுது தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டுமே தவிர, துக்கத்திற்கு இடம் தரக்கூடாது. உங்களுடைய பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றுவார் என்கிற தன்னம்பிக்கையுடன் நீங்கள் பூஜை செய்ய வேண்டுமே தவிர இப்படி எல்லாம் இருக்கிறது என்று அழுது கொண்டே ஒருபொழுதும் பூஜை செய்யக்கூடாது.

இதனால் உங்களுக்கு வரக்கூடிய நன்மைகளும் வராமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. வீட்டில் பூஜை செய்யும் பொழுது இறைவனை நினைத்து மனமுருகி அந்த இறைவனை நீங்கள் மனக் கண்களால் காணும் பொழுது உங்களை அறியாமல் நீங்கள் அழுது விடுவீர்கள்.

வீட்டில் மட்டுமல்ல கோவிலிலும் இதே தான் நிகழ்கிறது. மனமுருகி இறைவனை மனக்கண்ணால் நாம் கண்டு விடுகிறோம்,

அதனால் தான் நம்மை அறியாமல் நம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது நல்ல சகுனம் தான் தவறே இல்லை.

மனக் கண்களால் இறைவனை கண்டு நம் பிரார்த்தனைகளை எப்பொழுது வைக்கிறோமோ, அப்பொழுது அந்தப் பிரார்த்தனை கண்டிப்பாக தடையே இல்லாமல் உடனடியாக நிறைவேறிவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

மனதில் நம்பிக்கை இல்லாமல் நாம் வேண்டும் வேண்டுதலும், கவன சிதறல் உடன், இறை ஈடுபாடு இல்லாமல் நாம் வேண்டும் வேண்டுதலும் ஒருபொழுதும் அவ்வளவு எளிதாக நிறைவேறுவது இல்லை,

ஆனால் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் நீங்கள் உளம் உருகி அந்த இறைவன் உங்களுடன் இருப்பதாக நினைத்து முழு நம்பிக்கையோடு 200% மனமார பிரார்த்தித்துக் கொண்டால் உங்களுடைய வேண்டுதல் எத்தகையது ஆயினும் நிச்சயம் பலிக்கும்.

உண்மையிலேயே பிரச்சனை உள்ளவர்கள், உண்மையிலேயே இறைவனை நம்புபவர்கள், உண்மையிலேயே உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இது போல செய்வீர்கள். எல்லா கதவுகளும் மூடப்பட்ட பின்பு, எந்த ஆதரவும் இல்லாமல் நிராதரவாக இருக்கும் பொழுது, உங்களுடைய முழு நம்பிக்கையை இழந்த பொழுது, இறைவன் ஒருவனே உங்களுக்கு உதவி செய்ய முடியும் என்று தோன்றும் பொழுது, உங்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும்.

Leave a Reply