முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளையதினம் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் அங்கு இராணுவம், காவற்துறையினர், அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



